என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
  X

  கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

  தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் எட்டயபுரம் சாலையில் நடைபெற்றது.
  • தமிழ்நாடு காங்கிரஸ் துணைதலைவர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் எட்டயபுரம் சாலையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் சேகர் ராஜன், செந்தூர்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இதில் தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

  அப்போது அண்மையில் காங்கிரஸ் கட்சி அறிவித்த தொடர் போராட்டங்களில் கலந்து கொண்டு கைதானவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல்ராஜ் வழங்கினார்.

  கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி ராகுல்காந்தியை பிரதமராக்கும் வகையில் தொண்டர்கள் அயராது உழைப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  இதில் மண்டல தலைவர்கள் சேகர்ராஜன், செந்தூர்பாண்டி, முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சாமுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலட்சுமி, அமைப்புசாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன் விஜயராஜ், ரஞ்சிதம் ஜெபராஜ், ஜெயராஜ், கோபால், நாராயணசாமி, கனகராஜ், சித்திரை பால்ராஜ், குமார முருகேசன், மரிய செல்வராஜ், வெங்கட சுப்பிரமணியம், மெர்லின் ஜெபசிங், மகேந்திரன், பாக்யராஜ், சீனிவாசன், யேசுபாலன், ராஜரத்தினம், மைக்கேல் பிரபாகர், தாமஸ், ஜோபாய் பச்சே்க், டேவிட் வசந்தகுமார், தாமஸ், ராஜா, கன்னியம்மாள், அம்மாகனி, சவரியானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×