search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் இன்று அதிகாலை சம்பவம் : நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த வேன் - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்
    X

    நெல்லையில் இன்று அதிகாலை சம்பவம் : நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த வேன் - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

    • கோவில் கொடைவிழாவுக்கு தீர்தம் எடுப்பதற்காக அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 15 பேர் கன்னியாகுமரிக்கு இன்று அதிகாலை வேனில் புறப்பட்டனர்.
    • வேன் பாளையை அடுத்த டக்கரம்மாள்புரம் போலீஸ் செக் போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்த போது லேசான புகை மூட்டம் வேனில் இருந்து எழுந்துள்ளது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் இருந்து கோவில் கொடைவிழாவுக்கு தீர்தம் எடுப்பதற்காக அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 15 பேர் கன்னியாகுமரிக்கு இன்று அதிகாலை வேனில் புறப்பட்டனர்.

    பற்றி எரிந்த வேன்

    வேனை வாசுதேவ நல்லூர் சேனையர் நாட்டாமை தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டிச்சென்றார். வேன் பாளையை அடுத்த டக்கரம்மாள்புரம் போலீஸ் செக் போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்த போது லேசான புகை மூட்டம் வேனில் இருந்து எழுந்துள்ளது.

    உடனடியாக சுதா ரித்துக்கொண்ட டிரைவர் கணேசன் வேனை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு அதில் இருந்த பயணிகளை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். அவர்கள் அனைவரும் வேனை விட்டு இறங்கி சற்று தொலைவில் சென்றனர். சிறிது நேரத்திலேயே வேன் தீப்பற்றி மளமளவென எரியத்தொடங்கியது.

    எலும்பு கூடானது

    இதனால் அதிர்ச்சி யடைந்த கணேசன் பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மாவட்ட அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் வெட்டும்பெருமாள், நிலைய அலுவலர் ராஜா ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

    ஆனால் அதற்குள் வேன் முழுவதுமாக எரிந்து எலும்பு கூடானது.

    Next Story
    ×