என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளநீர் கால்வாய் திட்டத்திற்கு திம்மராஜபுரம் பாலத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்- தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனிடம் விவசாயிகள் மனு
    X

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பனை விவசாயிகள் நேரில் சந்தித்து கோரிக்கை குறித்து பேசிய காட்சி.

    வெள்ளநீர் கால்வாய் திட்டத்திற்கு திம்மராஜபுரம் பாலத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்- தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனிடம் விவசாயிகள் மனு

    • சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்படும் இந்த திட்டம் முடியும் தருவாயில் உள்ளது.
    • திம்மராஜபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனை, ராதா புரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க பொருளாளர் வீனஸ் வீர அரசு தலைமையில் திசையன்விளை சுற்றுவட்டார விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்து அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரி நீரை வறட்சி பகுதியான ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கு வெள்ளநீர் வடிகால் கால்வாய் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்படும் இந்த திட்டம் முடியும் தருவாயில் உள்ளது.

    தற்போது திம்மராஜ புரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் நடைமுறைப் படுத்தப்படாமல் உள்ளது. இந்த பாலத்தை நடைமுறைப்படுத்தினால் மட்டும்தான் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.

    கால்வாயில் வரும் முழு தண்ணீரையும் அப்போது தான் வறட்சி பகுதிகளுக்கு சென்று சேர்க்க முடியும். எனவே திம்மராஜபுரம் பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    Next Story
    ×