search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தைப்பூச திருவிழாவையொட்டி இன்று நெல்லையப்பர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    தைப்பூச திருவிழாவையொட்டி இன்று நெல்லையப்பர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விழாவின்போது ஆண்டுக்கு 3 முறை சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுடன் தீர்த்தவாரி வைபவத்திற்காக தாமிரபரணி தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்வது வழக்கம்.
    • விழாவின் 10-வது நாளான இன்று தை தீா்த்தவாாி நிகழ்ச்சி நடைபெற்றது

    நெல்லை:

    நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும்.

    தைப்பூச திருவிழா

    இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி தை மாதத்தில் வரும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவின்போது ஆண்டுக்கு 3 முறை சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுடன் தீர்த்தவாரி வைபவத்திற்காக தாமிரபரணி தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்வது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு கடந்த 26-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. விழாவின் 4-வது நாளன்று திருநெல்வேலி என பெயர் வர காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடைபெற்றது.

    தீர்த்தவாரி

    விழாவின் 10-வது நாளான இன்று தை தீா்த்தவாாி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அஸ்தர தேவர், அஸ்தர தேவி, சண்டிகேஸ்வரர் ஆகியோருடன் இன்று மதியம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தைப்பூச மகா மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

    கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு வழியாக ஈரடுக்கு மேம்பாலம், கைலாசப்புரம் வழியாக தைப்பூச மண்டபத்திற்க வந்தடைந்தபின்னர் அங்கு வைத்து யாக பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா் தாமிரபரணி நதிக்கு பூஜைகள் நடைபெற்றது.

    புனித நீராடினர்

    தொடர்ந்து நதிக்கரையில் அஸ்தர தேவர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு தைப்பூச மண்டபத்தில் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    தை தீா்த்தவாாி விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் தாமிரபரணி நதியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள், மற்ற மூர்த்திகள் மீண்டும் கோவிலுக்கு திரும்புகின்றனர்.

    தெப்ப திருவிழா

    நாளை நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு சவுந்திர சபையில் ஆனந்த நடனமாடி காட்சி தரும் வைபவமும், வருகிற 6-ந்தேதி(திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு கோவில் வெளித்தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தெப்ப திருவிழா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×