search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே நகை கடையில் நூதன முறையில் திருடிய பெண் தலைமறைவு - கூட்டாளி கைது
    X

    சூலூர் அருகே நகை கடையில் நூதன முறையில் திருடிய பெண் தலைமறைவு - கூட்டாளி கைது

    • ராணி நகையை திருடிவிட்டு வெளியே வரவும் தயாராக நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்ட மதன்ராஜிடம் 4½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    சூலூர்,

    சூலூர் அருகே கலங்கல் செல்லும் பாதையில் வசிக்கும் கண்ணன் (44) தனது வீட்டின் கீழ் தளத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ந் தேதி கடையில் உரிமையாளர் கண்ணன் மற்றும் தங்க வேலை செய்யும் ஆசாரி சீனிவாசன் ஆகியோர் இருந்தனர். அப்போது பர்தா அணிந்த பெண் ஒருவர் கடைக்கு வந்து தன்னிடம் 13 பவுன் பழைய தங்க நகை உள்ளது, அதை மாற்றி எனக்கு 10 பவுன் புதிய தங்க நகை தருமாறு கேட்டார்.

    நகைக்கடை உரிமையாளர் 13 பவுன் பழைய தங்க நகையை உரசி பார்க்க திரும்பிய போது அங்கிருந்த புதிய 10 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தயாராக இருந்த காரில் அந்த பெண் தப்பி ஓடி விட்டார்.

    இதையடுத்து கண்ணன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சூலூர் போலீசார் கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    விசாரணையில் நகை கடையில் 10 பவுன் நகையை திருடிச் சென்றது சேலம் மாவட்டம் மணியனூர் காந்தி நகரைச் சேர்ந்த மதன்ராஜ் (வயது 40) மற்றும் அவரது உறவுப் பெண் காட்பாடியைச் சேர்ந்த ராணி (35) என்பது தெரியவந்தது. 2 பேரும் திட்டமிட்டே அந்த நகைக்க டைக்கு சென்றுள்ளனர்.

    மதன்ராஜ் காருடன் வெளியே தயாராக நின்றுள்ளார். ராணி நகையை திருடிவிட்டு வெளியே வரவும் தயாராக நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றது தெரியவந்தது. இவர்களில் மதன்ராஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    ராணி தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×