search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசு மக்களை தேடி வந்து மக்கள் பணி செய்கிறது - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    புதிய கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தபோது எடுத்தபடம்.

    தமிழக அரசு மக்களை தேடி வந்து மக்கள் பணி செய்கிறது - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    • கட்டிடங்களை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
    • பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஓன்றியம், செம்மறிக்குளம் ஊராட்சி சத்யா நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம், செம்மறிக்குளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 23.57 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், குமாரலட்சுமிபுரத்தில் ரூ.11 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் ஆகிய வற்றிற்கான கட்டுமான பணிகள் நிறைவு பெற்றன.

    இக்கட்டிடங்களை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக இருந்து மக்கள்பணி செய்து வருகிறார். அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதுவும் அடித்தளமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

    முன்பெல்லாம் கிராம மக்கள்அரசு அலுவலகம் நோக்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று தமிழக அரசு மக்களை தேடி வந்து மக்கள் பணி செய்கிறது. இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்சிக்கு உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவரும், உடன்குடி மேற்கு ஓன்றிய தி.மு.க. செயலாள ருமான டி.பி.பாலசிங் தலைமை தாங்கினார்.உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெசி பொன்ராணி, செம்மறிக்குளம் ஊராட்சி மன்ற தலைவி ஆகஸ்டா மரியதங்கம், துணைத்தலைவர் நாராய ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் அஸ்ஸாப் அலி, ஜான்பாஸ்கர், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், தி.மு.க. கிளை நிர்வாகிகள் விஜயன், தினகரன், கோபால கிருஷ்ணன், முத்துசாமி, ரூபன், ராஜேந்திரன், செல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜார்ஜ் செல்வின் சகாயம் நன்றி கூறினார்.

    Next Story
    ×