search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையத்தில் கிடப்பில் கிடக்கும் கழிவுநீர் ஓடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் -மேயரிடம் கோரிக்கை மனு
    X

    மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோரிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டபோது எடுத்த படம்.

    மேலப்பாளையத்தில் கிடப்பில் கிடக்கும் கழிவுநீர் ஓடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் -மேயரிடம் கோரிக்கை மனு

    • கரீம் நகர் பகுதியில் கழிவு நீரோடை அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
    • 47-வது வார்டு முழுவதும் சாலை பழுதடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிரமமாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடந்தது. இதில் துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் நிர்வாகிகள் மேயரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:-

    மேலப்பாளையம் மண்டலத்துக்குட்பட்ட 52- வது வார்டில் இருக்கும் கரீம் நகர் பகுதியில் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையான கரீம் நகர் கழிவு நீரோடை அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. சில ஆக்கிரமிப்பாளர்களின் குறுக்கீடுகளினால் கழிவு நீரோடை அமைக்கும் பணியானது முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த பணியை விரைந்து முடித்துத் தர வேண்டும். கரீம் நகர் மஸ்ஜிதுல் ஹீதா பள்ளிவாசல் அருகே அமைந்திருக்கும் கழிவு நீரோடை முறையான அமைப்பில் இல்லாமல் கழிவுநீர் சீராக செல்லாமல் பள்ளிவாசல் அருகே தேங்கி நிற்கும் நிலை உள்ளது. அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அதனை விரைந்து சரி செய்ய வேண்டும்.

    மேலும் 47-வது வார்டு முழுவதும் தெருப்புறங்களில் இருக்கும் சாலை பழுதடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மிக சிரமமாக உள்ளது. எனவே அந்த வார்டு முழுவதும் புதிதாக தார் சாலை அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் புகாரி சேட், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் காதர் மீரான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×