search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாமிரபரணி நதியை பாதுகாக்க அரசு திட்டம் வகுக்க வேண்டும்- எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் முபாரக் பேட்டி
    X

    எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி அளித்த போது எடுத்த படம்.

    தாமிரபரணி நதியை பாதுகாக்க அரசு திட்டம் வகுக்க வேண்டும்- எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் முபாரக் பேட்டி

    • நாட்டையே உலுக்கியுள்ள துரதிஷ்டமான இந்த ரெயில் விபத்து அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது
    • முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை என்பது இஸ்லாமிய சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

    நெல்லை:

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மண்டலத் திற்குட்பட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நெல்லையில் உள்ள ஓட்டலில் இன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நெல்லை மண்டல தலைவர் ஜூல்பிகர் அலி தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

    தொடர்ந்து நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதி பிறந்தநாள்

    நாட்டையே உலுக்கியுள்ள துரதிஷ்டமான இந்த ரெயில் விபத்து அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது. விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழகம் முழுவதும் கருணாநிதி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் வாழும் காலம் வரை அவரின் புகழ் இன்னும் பல நூற்றாண்டு கடந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

    முஸ்லிம் ஆயுள் சிறை வாசிகளின் விடுதலை கோரிக்கை என்பது இஸ்லாமிய சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையாகும். கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு முஸ்லிம் ஆயுள் சிறைவாசி களை விடுதலை செய்திட வேண்டும். பெண் மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை மேற்கொள்ளா மல், தேசிய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவ ரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை காப்பாற்ற முனையும் பா.ஜனதா அரசின் நடவடிக்கை கண்டிக் கத்தக்கது.

    சிறப்பு நிதி

    வற்றாத ஜீவநதியாக இருந்த தாமிரபரணியின் இன்றைய நிலைமை வேதனையளிக்கும் வகையில் உள்ளது. மணல் கொள்ளை, தண்ணீர் கொள்ளையால் அதன் உயிரோட்டம் அழிக்கப்பட்டுவிட்டது. கரையோர ஆக்கிரமிப்புகள், கழிவுகள், சாக்கடைகள் மூலம் அதன் பொழிவை இழந்துவிட்டது. அந்த நதியை பாதுகாக்க தேவையான சிறப்பு திட்டத்தை அறிவித்து, அதற்கான சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். கங்கை நதியை பாதுகாக்க தனிக்கவனம் செலுத்தி அதற்கான வேலைகளை செய்து வரும் மத்திய அரசு தாமிர பரணியை பாதுகாக்கவும் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின் றோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் நிர்வாகிகள் அகமது நவவி, சேக் அப்துல்லா, மாநில பேச்சா ளர் பேட்டை முஸ்தபா, மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச்செ யலாளர் கனி, புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், உமர், சிக்கந்தர், சத்தார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×