என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை மடக்கி பிடித்த என்ஜினீயர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- திருட முயற்சி செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கோவை:
கோவை அன்னூர் பசூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவர் அங்குள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் தனது மோட்டார் சைக்கிளில் பசூர் பகுதிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றார். அங்கு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தி மண்டபத்திற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளிவே வந்தார்.
அப்போது அவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் திருட முயற்சி செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ராஜ்குமார் தனது நண்பர்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அவரை அன்னூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அந்த வாலிபர் ஈரோட்டை சேர்ந்த அருண்குமார் (27) என்பது தெரிவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story