search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது மக்களின் கோரிக்கையை ஏற்று வண்ணார்பேட்டை தற்காலிக கழிப்பறையை   சுத்தப்படுத்திய மாநகராட்சி பணியாளர்கள்
    X

    மாநகரட்சி ஊழியர் சுற்றியுள்ள பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடர் தூவிய காட்சி

    பொது மக்களின் கோரிக்கையை ஏற்று வண்ணார்பேட்டை தற்காலிக கழிப்பறையை சுத்தப்படுத்திய மாநகராட்சி பணியாளர்கள்

    • நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதி விளங்குகிறது.
    • இந்த பகுதியில் வந்து செல்லும் பொதுமக்கள் வசதிக்காக பாலத்தின் அருகே தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதி விளங்குகிறது.

    இந்த பாலத்தின் கீழ் பகுதியில் அனைத்து பஸ்களும் வந்து செல்கின்றன. இந்த பகுதியில் ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள் என ஏராளமான கட்டிடங்கள் இருப்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த பகுதியில் வந்து செல்லும் பொதுமக்கள் வசதிக்காக பாலத்தின் அருகே தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் இந்த கழிப்பறையை தினமும் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். இங்கு வந்து செல்லும் பொதுமக்கள் அந்த தற்காலிக கழிப்பறையின் நிலை குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்வதற்காக தச்சை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ அங்கு பதிவேடு ஒன்றை வைத்துள்ளார்.

    அதில் கழிப்பறையை பயன்படுத்துபவர்கள் தங்களது கருத்துக்களை எழுதி வைத்துச் செல்கின்றனர். கடந்த 2 நாட்களாக கழிவறைக்கு வந்த பொதுமக்கள் அதனை சுத்தப்படுத்துமாறு அறிவுறுத்தி இருந்தனர்.

    அதன் அடிப்படையில் இன்று சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கழிப்பறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடர் தூவினர்.

    Next Story
    ×