search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மத்திய ஜெயில் புதிய வளாகம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்
    X

    கோவை மத்திய ஜெயில் புதிய வளாகம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்

    • பணிகள் விரைவில் தொடங்கும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • 89 ஏக்கர் நிலத்திற்கு முன்பு நுழைவு அனுமதி சான்று வழங்கப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவையில் தற்போது மத்திய சிறை அமைந்துள்ள காந்திபுரம் பகுதி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். மேலும் மாநகரின் மையப்பகுதியிலும் ஜெயிலானது அமைந்துள்ளது.

    மத்திய ஜெயில் வளாகத்தில் போதிய அளவில் வசதிகள் இல்லை. இதனால் வேறு இடத்துக்கு ஜெயில் வளாகத்தை மாற்ற தீர்மானிக்கப்பட்டு இருந்தது. அதன் பேரில் கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பிளிச்சி பகுதிக்கு புதிய ஜெயில் வளாகத்திற்கு ஏற்ற இடமாக தேர்வு செய்யப்பட்டிருந்தது.

    இதையடுத்து பூமிதான இயக்கத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டிருந்த 100 ஏக்கர் நிலம் புதிய ஜெயில் வளாகத்திற்கு ஏற்ற இடமாக தேர்வு செய்யப்பட்டது. பிளிச்சியில் புதிய மத்திய ஜெயில் வளாகம் அமைப்பதற்கான பணிகளில் முதற்கட்டமாக 95 ஏக்கர் நிலம் கையகப்ப டுத்தப்பட்டுள்ளது.

    இதில் தற்போது 89 ஏக்கர் நிலத்திற்கு முன்பு நுழைவு அனுமதி சான்று வழங்கப்பட்டுள்ளது.

    வருவாய்த்துறைக்கு சொந்தமான ஒரு நிலத்தை வேறு அரசுத்துறைக்கு வளர்ச்சி பணிகளுக்காக மாற்றி கொடுக்கும்போது முன் நுழைவு அனுமதி சான்றிதழ் இருந்தால் தான் சம்பந்தப்பட்ட அரசுத்துறையில் இருந்து நிதி ஒதுக்கீடு திட்டம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என்பது விதியாகும்.

    இதன் அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டுள்ள முன் நுழைவு அனுமதி சான்றிதழின் மூலம் வருவாய்த்துறைக்கு சொந்தமான அந்த நிலம் தற்போது ஜெயில் துறையினர் வசம் வந்துள்ளது.

    இதையடுத்து புதிய ஜெயில் வளாகம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×