என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிரைவரை வெட்டிய அண்ணன்- தம்பி கைது
- தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் வாடகை கார் ஓட்டும் டிரைவராக உள்ளார்.
- பின்னர் உரிய வாடகைகயை தரும்படி டிரைவர் வெங்கடேஷ் கேட்டார். இதில் அவர்களுடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த டிரைவரை அரிவாளால் வெட்டினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 25). வாடகை கார் ஓட்டும் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த சின்னகண்ணு (55), அவரது குடும்பத்தினர், காரை வாடகைக்கு எடுத்தனர். பின்னர் உரிய வாடகைகயை தரும்படி டிரைவர் வெங்கடேஷ் கேட்டார். இதில் அவர்களுடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த சின்னகண்ணு, இவரது மகன்கள் மணிகண்டன் (28), சிவா (20) ஆகியோர் டிரைவரை அரிவாளால் வெட்டினர். காயம் அடைந்த வெங்கடேஷ் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்படி தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன், சிவா ஆகியோரை கைது செய்தனர்.
Next Story






