என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவையில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் வாலிபர் தற்கொலை
  X

  கோவையில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கடனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கினார்.
  • இது குறித்து பீளமேடு போலீசாருக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை,

  கோவை காளப்பட்டி அருகே உள்ள செந்தூர் திருநகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் பழனி பாரதி (வயது 25). கிரைண்டர் மெக்கானிக். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கடனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கினார்.

  பின்னர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மேலும் நண்பர்கள் சிலரிடமும் கடன் வாங்கி இருந்தார். ஆடம்பர வாழ்க்கைகாக வாங்கிய கடனை பழனி பாரதி திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

  இதனால் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பழனி பாரதி வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×