என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசியில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வாலிபர் 2-வது முறையாக கைது
- மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில் கமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கமலை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
தென்காசி:
தென்காசி காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தென்காசி ஹவுசிங் போர்டு காலணியை சேர்ந்த துரையரசு என்பவரின் மகனான கமல் (வயது27) என்ற நபர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தினார்.
அதையேற்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில் மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சமர்பித்தார்.மேலும் கமல் என்பவர் ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 2017 -ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






