search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு வட்டார பகுதியில்  விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி முகாம்
    X

    கயத்தாறு வட்டார பகுதியில் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி முகாம்

    • திருமலாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
    • உரமிடுதல் அங்கக பந்தயம் குறித்து துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமார் மற்றும் காளி ராஜன் ஆகியோர் விளக்கி கூறினர்.

    கயத்தாறு:

    கயத்தாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் அறிவுறுத்தலின்படி ஆத்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சேமிப்பு திட்டத்தின் கீழ் திருமலாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    இந்த பயிற்சி முகாமில் தமிழக முதல்-அமைச்சரின் மானாவரி நில மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

    இந்த பயிற்சி முகாமில் ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குனர் எல்லப்பன் மற்றும் வேளாண்மை துறை ஓய்வு பெற்றவேளாண்மைத்துறை உதவி இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் கோடை உழவு மற்றும் அடி உரம், வேப்பம் புண்ணாக்கு உரமிடுதல் மண் பரிசோதனை ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக பயிற்சி அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து உரமிடுதல் அங்கக பந்தயம், இயற்கை முறையில் பூச்சி மருந்து நோய்களை தடுக்கும் முறை, உயிர் உரங்கள் முக்கியத்துவம், சூரிய விளக்குப்பொறி, இன கவர்ச்சி பொறி, மஞ்சள் ஒட்டு பொறி, குறித்து துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமார் மற்றும் காளி ராஜன் ஆகியோர் விளக்கி கூறினர்.

    இதனைத் தொடர்ந்து வேளாண் திட்டங்கள் கிராமப்புற விவசாயிகளுக்கு என்னென்ன பயன்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்தும், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகள் எவ்வாறு பயனடைய வழி வகைகள் குறித்தும் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வேளாண் வணிகவரித்துறை உதவி அலுவலர் பிரான்சிஸ், தமிழக அரசின் சேமிப்பு கிடங்கு குறித்து உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு பங்கு குறித்தும், விளக்கம் அளித்தார். இந்த விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சியில் அனைத்து ஏற்பாடுகளையும் வேளாண்மை அலுவலர் மணிகண்டன், உதவி வேளாண்மை அலுவலர் முத்துமாரி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாலமந் நவராஜ்பொற்செல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரத்தினம்பால், ஜெயலட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×