என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தஞ்சை தமிழ்பல்கலைக்கழக பேராசிரியரை காரில் கடத்தி தாக்குதல்
  X

  தஞ்சை தமிழ்பல்கலைக்கழக பேராசிரியரை காரில் கடத்தி தாக்குதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சம்பவத்தன்று பல்கலைக்கழகத்தில் பணியில் இருந்தபோது இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
  • தனியார் ஆஸ்பத்திரியில் பாலசுப்பிரமணியன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை மாதாக்கோட்டை சாலையில் உள்ள வங்கி ஊழியர் காலனியை சேர்ந்தவர் உல.பாலசுப்பிரமணியன் (வயது 47).

  இவர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அகராதியியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று பல்கலைக்கழகத்தில் பணியில் இருந்தபோது இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

  அதில் உங்களிடம் பேச வேண்டும். நாங்கள் வெளியே காத்திருக்கிறோம் என்று கூறி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

  இதையடுத்து பாலசுப்பிரமணியன் தனது காரில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே சென்றார்.

  அங்கு நின்று கொண்டிருந்த சிலர் காரில் ஏறினர்.

  திடீரென அவர்கள் பாலசுப்பிரமணியத்தை சரமாரியாக தாக்க தொடங்கினர்.

  பின்னர் அவர்களில் ஒருவர் காரை ஓட்டி கொண்டு சென்றார்.

  தொடர்ந்து ஓடும் அந்த கும்பல் பாலசுப்பிரமணியத்தை தாக்கியவாறு சென்றுள்ளனர்.

  தொடர்ந்து திருவையாறு பகுதியில் காரை நிறுத்தி விட்டு செல்போன், பர்ஸ்சை பறித்து கொண்டு தப்பினர்.

  இதையடுத்து பலத்த காயங்க ளுடன் பாலசுப்பிரமணியன் தனது வீட்டுக்கு வந்து மனைவி வளர்மதியிடம் நடந்த விவரங்களை கூறினார்.

  இதையடுத்து தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பாலசுப்பிரமணியன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இது குறித்து வளர்மதி தமிழ்பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  முதல்கட்ட விசாரணையில் பல்கலைக்கழகத்தில் வேலைபார்க்கும் பெண் ஒருவரின் மகன் சந்தோஷ் (வயது 23) என்பவர் சிலருடன் சேர்ந்து பாலசுப்பிரமணியத்தை காரில் கடத்தி சென்று தாக்கியதாக தெரியவந்தது.

  இதனை தொடர்ந்து சந்தோஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

  சந்தோஷ் பிடிப்பட்டால் தான் இந்த வழக்கின் உண்மை தன்மை தெரியவரும்.

  இருப்பினும் பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×