என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சை ஸ்டெம் பூங்காவில் உள்ள ராக்கெட் தளத்தை மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சை ஸ்டெம் பூங்கா மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் - மேயர் தகவல்
- தஞ்சை அருளானந்த நகரில் ரூ.11.50 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம்அமைக்கப்பட்டு வருகிறது.
- ஸ்டெம் பூங்காவை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருளானந்த நகரில் ரூ.11.50 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா (ஸ்டெம் பூங்கா) அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இந்த நிலையில் இன்று இந்த ஸ்டெம் பூங்காவை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்குள்ள கோளரங்கம், ராக்கெட் தளம் உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மாநகராட்சி சார்பில் ஸ்டெம் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
95 சதவீதம் பணிகள் முடிவடைந்து இதர பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணி அடுத்த மாதத்தில் முடிவடைந்து பொதுமக்கள், மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
இந்த ஸ்டெம் பூங்காவை விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.
சில மாணவ-மாணவிகள் இணையதள விளையாட்டில் மூழ்கி கவனத்தை சிதற விடுகின்றனர்.
இதனால் அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது.
அந்த எண்ணத்தை ஸ்டெம் பூங்கா மாற்றும்.
இந்த பூங்காவுக்கு மாணவர்கள் வருவதன் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த அறிவு வளர்ச்சி மேலும் அவர்களுக்கு வளரும்.
இங்குள்ள கோளரங்கம், ராக்கெட் தளம் உள்ளிட்ட பல வகைகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பூங்காவால் அவர்கள் இணையதள விளையாட்டில் மூழ்க மாட்டார்கள்.
அவர்களின் படிப்பிருக்கும் மிகவும் உறுதுணையாக இந்த பூங்கா அமையும்.
எனவே திறப்பு விழா முடிந்த பிறகு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்டிப்பாக பூங்காவுக்கு அழைத்து வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ், மண்டல குழு தலைவர் ரம்யா சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






