என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி வளாகத்தில்   ஒரே நாளில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
    X

    தஞ்சை ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒரே நாளில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

    • சிகிச்சைக்கு வருகிறவர்கள் மற்றும் அவர்களை பார்க்க வருபவர்கள் மோட்டார் சைக்கிள் அடிக்கடி திருட்டு போவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
    • சி.சி.டி.வி காட்சிகளுடன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமல்லது திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்கு வருகிறவர்கள் மற்றும் அவர்களை பார்க்க வருபவர்கள் மோட்டார் சைக்கிள் அடிக்கடி திருட்டு போவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் தஞ்சை வண்ணாரப்பேட்டை சேர்ந்த மதிவாணன் உள்பட 4 பேரின் மோட்டார் சைக்கிள்கள் ஒரே நாளில் திருட்டுப் போய் உள்ளது.

    இது குறித்த சி.சி.டி.வி காட்சிகளுடன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏழை எளிய மக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும்போது இது போன்று வாகனங்களை பறிகொடுத்து வருவதால் அவர்கள் மேலும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே உடனடியாக ராசா மிராசுதார் ஆஸ்பத்திரியில் மோட்டர் சைக்கிள்கள் உள்ளிட்ட வானங்கள் திருட்டு போவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×