என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- பரமேஸ்வரனுக்கும் ரம்யாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- ரம்யாவிற்கு திருமணம் ஆகி 3 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த களியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் தச்சராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (வயது 23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பரமேஸ்வரனுக்கும் ரம்யாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த ரம்யா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரம்யாவிற்கு திருமணம் ஆகி 3 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
Next Story






