search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் முதுநகரில் தக்காளியை கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்த வியாபாரி
    X

    கடலூர் முதுநகரில் தக்காளியை கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்த வியாபாரி

    • ரேஷன் கடைகளில் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு தமிழக அரசின் உத்தரவு பேரில் விற்பனை செய்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் அதிக அளவில் அந்த கடைக்கு வந்து போட்டி போட்டுக் கொண்டு தக்காளியை வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் என பெரும்பாலான காய்கறி விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் இஞ்சி கிலோ 250 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 150 ரூபாய் வரையிலும், தக்காளி 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த விலை உயர்வானது தற்போது வரை குறையாமல் தொடர்ந்து நீடித்து வருவதால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருவதோடு காய்கறியை வாங்குவதை குறைத்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு தமிழக அரசின் உத்தரவு பேரில் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடலூர் முதுநகர் சாலைக்கரை பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில், கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் தக்காளி விலை தொடர்ந்து குறையாத காரணத்தினால் இன்று ஒரு கிலோ தக்காளியை 30 ரூபாய்க்கு விற்பனை செய்தார். இதனால் பொதுமக்கள் அதிக அளவில் அந்த கடைக்கு வந்து போட்டி போட்டுக் கொண்டு தக்காளியை வாங்கி சென்றனர். ஆனால் ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்பட்டது. தக்காளி அனைத்தும் சுமார் 1 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. இதே வியாபாரி கடந்த சில வாரங்களுக்கு முன்பு 20 ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×