என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் ரேஷன் கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனை- கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    திருப்பூர் ரேஷன் கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனை- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • திருப்பூர் காலேஜ் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இன்று காலை குறைந்த விலையில் தக்காளி விநியோகம் செய்யப்பட்டது.
    • தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், துணை மேயர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தனர்.

    திருப்பூர்:

    தமிழக முழுவதும் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு சீராக தக்காளி கிடைக்கவும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உழவர் சந்தைகளில் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்யும் வகையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்தநிலையில் திருப்பூர் காலேஜ் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இன்று காலை குறைந்த விலையில் தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், துணை மேயர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தனர். இதில் கவுன்சிலர் சின்னச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்து நின்று குறைந்த விலையில் தக்காளியை வாங்கி சென்றனர்.

    Next Story
    ×