search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோஷ்டி மோதல்: 3 பேர் படுகாயம்- 21 பேர் மீது வழக்கு
    X

    செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோஷ்டி மோதல்: 3 பேர் படுகாயம்- 21 பேர் மீது வழக்கு

    • சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சுமார் 42 சிறுவர்கள் உள்ளனர்.
    • மோதலில் ஈடுபட்ட 21 சிறுவர்கள் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இங்கு சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சுமார் 42 சிறுவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அங்கு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 20 போலீசார் ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிறுவர் சீர்திருத்தப்பள்யில் சேர்க்கப்பட்டு உள்ள சிறுவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து உள்ளனர். நேற்று மாலை அவர்களுக்கு இடையே திடீரென பயங்கர மோதல் ஏற்பட்டது. அவர்கள் அங்கு கிடந்த கம்பு, கம்பி மற்றும் கையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிறுவர்களை அப்புறப்படுத்தினர்.

    இந்த மோதலில் சேலம், விருத்தாசலம், சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சிறுவர்கள் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இது தொடர்பாக சிறுவர் சீர்திருத்தப்பள்ளி சார்பில் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மோதலில் ஈடுபட்ட 21 சிறுவர்கள் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் இது போன்று மீண்டும் சம்பவம் நடைபெறாமல் இருக்கவும் சீர்திருத்தப்பள்ளி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    Next Story
    ×