search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ம.தி.மு.க.வினர் தாக்கப்பட்ட வழக்கில் சீமான் விடுதலை- திருச்சி நீதிமன்றம் உத்தரவு
    X

    ம.தி.மு.க.வினர் தாக்கப்பட்ட வழக்கில் சீமான் விடுதலை- திருச்சி நீதிமன்றம் உத்தரவு

    • 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு தொடர் வண்டிகளில் சலுகை வழங்குவதால் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார்.
    • நாட்டின் கடன் தொகை 100 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோரை வரவேற்பதில் இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சோமு உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட 14 பேர் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றம் என் 6-ல் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் நிரூபிக்கப்படாததால் சீமான் உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்வதாக தெரிவித்தார்.

    பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் நீதிபதிகள் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு தொடர் வண்டிகளில் சலுகை வழங்குவதால் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார். நாட்டின் கடன் தொகை 100 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

    சலுகை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்கக்கூடாது. உயர்ந்த இடத்தில் உள்ள நீதிபதிகள் குறித்து எதிர்மறையான கருத்துக்களை பதிவிடக்கூடாது. அது சிக்கலை ஏற்படுத்தும். ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து மக்கள் கருத்து கேட்பதற்கு முன்பாக முதலமைச்சர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    டாஸ்மாக் கடையை மூடுவது மற்றும் எட்டு வழி சாலை அமைப்பது தொடர்பான முதலமைச்சரின் கருத்தை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×