என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராயபுரத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது
    X

    ராயபுரத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது

    • பூங்காவில் நடைபயிற்சி செல்லும் போது மாணவிக்கு, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜெபக்குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
    • அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ராயபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    ராயபுரம்:

    ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெபக்குமார் (வயது 55). இவர் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    குடியிருப்பில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி செல்லும் போது மாணவிக்கு, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜெபக்குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். மேலும் அவர் மாணவிக்கு தொடர்ந்து இதுபோல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக ராயபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    விசாரணையில் ஜெபக்குமார், மாணவிக்கு பாலியல் தொலை கொடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×