என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னை பெருங்குடியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு- போலீஸ் விசாரணை
- உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு.
- வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு விசாரணை.
சென்னை பெருங்குடியில் குடிநீர் உறை கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கிணற்றில் சுத்தம்செய்து கொண்டிருந்த காளிதாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில் அவரை காப்பாற்றச் சென்ற சரவணனும் பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






