என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோடம்பாக்கத்தில் பணம் கேட்டு மிரட்டல்- ஆன்லைன் டெலிவரி ஊழியர் மீது தாக்குதல்
- ராஜேஸ்வரனை வழிமறித்து பணம்கேட்டு மிரட்டி தாக்கி தப்பி சென்று விட்டார்.
- கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரை கைது செய்தனர்.
தேனாம்பேட்டை, ஆலையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். ஆன்லைன் நிறுவன ஊழியர். இவர் இன்று காலை கோடம்பாக்கம் அஜீஸ் நகர் பகுதியில் வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம வாலிபர் ஒருவர், ராஜேஸ்வரனை வழிமறித்து பணம்கேட்டு மிரட்டி தாக்கி தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சூர்யா (19) என்பவரை கைது செய்தனர்.
Next Story






