என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை வாலிபர்  கைது
    X

    சூலூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை வாலிபர் கைது

    • நாட்கள் செல்ல, செல்ல அந்த பால் பிரவீனின் உண்மை முகம் தெரிய வந்தது.
    • புகாரின் பேரில் போலீசார் மாணவியின் தாயையும், அவரது கள்ளக்காதலனையும் பிடித்து விசாரித்தனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்று சூலூர் போலீஸ் நிலையத்திற்கு தனது பாட்டியுடன் வந்து புகார் அளித்தார்.

    நான் சூலூர் பகுதியில் எனது தாயுடன் வசித்து வருகிறேன். எனது தாய் இங்கு அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். எனது தாய், எனது தந்தையை கடந்த 11 வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டார். இதனால் நானும், எனது தாயாரும் மட்டும் தனியாக வசித்து வந்தோம். எனது தந்தை யார் என்பதே தெரியாமல் இருந்தேன்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு எனது தாயார் சென்னை அயனாவரத்தை சேர்ந்த பால்பிரவீன் (35) என்பவரை அழைத்து வந்தார். இவர் யார் என்று கேட்டபோது, இனி இவர் தான் உன் தந்தை என எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நானும் அவருடன் தந்தை என்ற முறையிலேயே பழகி வந்தேன்.

    அவர் என்னிடம் அடிக்கடி செல்போனிலும் வீடியோ காலிலும் பேசி வந்தார். நானும் தந்தை என்ற முறையிலேயே பேசினேன்.

    ஆனால் நாட்கள் செல்ல, செல்ல அந்த நபரின் உண்மை முகம் தெரிய வந்தது. பால்பிரவீன் செல்போனில் வீடியோ காலில் பேசும் போது, அவர் லேப்-டாப்பில் வைத்துள்ள ஆபாச படங்களை போட்டு வீடியோ கால் மூலமாக காண்பித்து வந்தார். நான் பார்க்க மறுத்தாலும் நீ பார் என வற்புறுத்தி வந்தார்.

    மேலும் எங்கள் வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்குவார். அப்போது இரவில் நான் தூங்கிய பிறகு தொடக்கூடாத இடங்களில் தொட்டு என்னிடம் பாலியல் சில்மிஷத்திலும் ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து அவரின் செயல்கள் அதிகரிக்கவே எனது தாயாரிடம் இது குறித்து நான் தெரிவித்தேன்.

    ஆனால் எனது தாய், அவரை எதுவும் சொல்லாமல் என்னை திட்டி தாக்கினார். இதனால் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்தநிலையில் எனது தாயின் ஆண் நண்பருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தகவல் அறிந்தேன். இனிமேல் பிரச்சினை இருக்காது என்று தான் நினைத்திருந்தேன். ஆனாலும் அந்த நபர் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச படங்களை காண்பித்து பார்க்க கூறினார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பால் பிரவீன் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கினார். அப்போதும் அவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

    இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்து வந்தேன். பள்ளியில் நான் மிகவும் கவலையுடன் இருப்பதை பார்த்த ஆசிரியர்கள் என்னவென்று கேட்டனர்.

    அப்போது நான் எனக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை என்றும், எனக்கு எனது தாயின் கள்ளக்காதலன் கொடுத்த பாலியல் தொந்தரவுகளையும் தெரிவித்தேன்.

    அவர்களும் எனது பாட்டியை அழைத்து விசாரித்து விட்டு புகார் கொடுக்க அறிவுறுத்தினர். அதன்படி புகார் கொடுத்துள்ளேன். எனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வரும் எனது தாயாரின் கள்ளக்காதலன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் மாணவியின் தாயையும், அவரது கள்ளக்காதலனையும் பிடித்து விசாரித்தனர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தவர்கள் போலீசாரின் விசாரணையை அடுத்து ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து போலீசார் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பால்பிரவீனை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மாணவியின் தாயும் கைது செய்யப்பட்டார்.

    2 பேர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×