என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே கத்தி முனையில் மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
- சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு்திவு செய்து பஞ்சாட்சரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருத்தணி:
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள தாமனேரி கிராமம் ரங்காபுரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது ஆட்டுக்குட்டியை தேடி தாமனேரி மலைப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஆதிவராதபுரம் காலனி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த பஞ்சாட்சரம் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு்திவு செய்து பஞ்சாட்சரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






