என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொளத்தூரில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை
- மனைவி பிரிந்து சென்றதால் மணிகண்டன் மிகவும் மனவேதனை அடைந்தார்.
- நேற்று இரவு வீட்டிற்கு வந்த மணிகண்டன் திடீரென படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொளத்தூர்:
கொளத்தூர் அடுத்த வெற்றி நகர் ஜெகதீசன் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது26). இவர் ஆட்டோ டிரைவராகவும் போட்டோகிராபராகவும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சன்மதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
மணிகண்டனுக்கும் அவரது மனைவி சன்மதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சன்மதி பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி பிரிந்து சென்றதால் மணிகண்டன் மிகவும் மனவேதனை அடைந்தார். நேற்று இரவு வீட்டிற்கு வந்த மணிகண்டன் திடீரென படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.