search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிண்டியில் தண்டவாளத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் ரெயில்கள் மெதுவாக இயக்கம்
    X

    கிண்டியில் தண்டவாளத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் ரெயில்கள் மெதுவாக இயக்கம்

    • வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மட்டும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மின்சார ரெயில்களும் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.
    • பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் இடுப்பளவு வெள்ளம் தேங்கி உள்ளது.

    சென்னை:

    சென்னையில் பல நாட்கள் வெயிலில் நடமாட முடியாமல் தவித்த மக்களை ஒரேநாள் மழை தவிக்க வைத்துவிட்டது. பல இடங்களில் ரோடுகளில் வெள்ளம் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளம் வெளியே தெரியாத அளவுக்கு மூழ்கி உள்ளது. மின்சார ரெயில் தண்டவாளம் லேசாக தெரியும் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதனால் பாதுகாப்பு கருதி ரெயில்வே ஊழியர்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ரெயில்கள் தூரத்தில் வரும்போதே கையில் வைத்திருக்கும் அவசரகால விளக்கை காட்டி ரெயில்களை மெதுவாக செல்ல வைக்கிறார்கள்.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மட்டும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மின்சார ரெயில்களும் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.

    பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் இடுப்பளவு வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் நடந்து செல்லும் பயணிகளும் செல்ல முடியவில்லை.

    இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் அந்த வழியாக தரைதளத்தில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்துக்கு செல்ல முடியவில்லை. ஒவ்வொரு மழை காலத்திலும் இந்த சாலை இப்படித்தான் வெள்ளத்தால் துண்டிக்கிறது. இந்த பகுதியில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு எதையும் காணவில்லை.

    மழைக்காலத்தில் மட்டும் மோட்டார் வைத்து ஓரளவு தண்ணீரை வெளியேற்றி சமாளிப்பார்கள். அதன்பிறகு அடுத்த மழை காலத்தில் தான் அதுபற்றி யோசிக்கிறார்கள்.

    Next Story
    ×