என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டில் இன்று அதிகாலை லாரி மோதி தொழிலாளி பலி
- லாரியின் சக்கரத்தில் சிக்கிய குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த திருமணி, கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது45).தொழிலாளி. இவர் இன்று அதிகாலை செங்கல்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார்.
செங்கல்பட்டில் உள்ள ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரி அருகே வந்து கொண்டு இருந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






