search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தமிழகம் முழுவதும் நாளை பா.ஜ.க ஆர்ப்பாட்டம்- விவசாய அணி சார்பில் நடக்கிறது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகம் முழுவதும் நாளை பா.ஜ.க ஆர்ப்பாட்டம்- விவசாய அணி சார்பில் நடக்கிறது

    • பள்ளிகளில் சத்துணவோடு தேங்காய் சீவல் அல்லது தேங்காய்ப்பால் வழங்க வேண்டும்.
    • நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும்.

    கோவை:

    தென்னை விவசாயிகளை காக்க பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா 2 தேங்காய்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க விவசாய அணி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தேங்காய் விலை வெகுவாக சரிந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதனால் தேங்காய் விவசாயிகளை காப்பாற்றும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 தேங்காய்கள் வழங்க வேண்டும்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு பா.ஜ.க விவசாய அணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதேபோல பள்ளிகளில் சத்துணவோடு தேங்காய் சீவல் அல்லது தேங்காய்ப்பால் வழங்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும்.

    பல்வேறு இடர்பாடுகளால் நஷ்டத்தில் இயங்கி வரும் தேங்காய் மட்டை தொழிற்சாலைகளை காப்பாற்ற தமிழக அரசு தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×