search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜே.பி.நட்டா வருகை தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும்- அண்ணாமலை
    X

    ஜே.பி.நட்டா வருகை தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும்- அண்ணாமலை

    • அகில இந்திய அளவில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
    • முதன் முறையாக இன்று கோவை, நீலகிரியில் இருந்து பயணத்தை தொடங்குகிறார்.

    கோவை:

    பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று கோவை வந்தார். காலையில் அவர் கோட்டை மேடு ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அவர் கோவை வருகையில் தாமதம் ஏற்பட்டதால் ஈஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்யும் நிகழ்ச்சி மட்டும் ரத்து செய்யப்பட்டது.

    அதேசமயம் மத்திய மந்திரி எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் வந்து ஈஸ்வரன் கோவிலுக்கு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அகில இந்திய அளவில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அந்த வகையில் முதன் முறையாக இன்று கோவை, நீலகிரியில் இருந்து பயணத்தை தொடங்குகிறார். தமிழகத்தில் இருந்து இந்த பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காக தான் கோவை, நீலகிரியில் இருந்து தேசிய தலைவர் தனது பாராளுமன்ற பயணத்தை தொடங்கியுள்ளார்.

    இந்த பகுதி மக்கள் தேச பக்தி உடையவர்கள். பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை தமிழகத்தில் மிகப்பெரியை எழுச்சியை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×