search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரலில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய கிளை திறப்பு
    X

    ஏரலில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளையை சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் திறந்து வைத்த போது எடுத்த படம்.

    ஏரலில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய கிளை திறப்பு

    • மெர்க்கன்டைல் வங்கியின் 531-வது கிளை தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அமைக்கப்பட்டு உள்ளது.
    • சிறப்பு அழைப்பாளராக ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்கு சந்தைகளில், தனது பங்கு பட்டியலிட்டதை தொடர்ந்து, தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மீண்டும் நாடு முழுவதும் வங்கி விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. இந்த வங்கி ஏற்கனவே 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 530 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களுடன் செயல்பட்டு வருகிறது.

    வங்கியின் 531-வது கிளை தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. வங்கி பொதுமேலாளர் பி.சூரியராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். விழாவில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து வங்கி நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் கூறியதாவது:-

    பங்குசந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது, நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, இந்த நிதியாண்டின் முதல் புதிய கிளையாக 531-வது கிளை ஏரலில் திறக்கப்பட்டு உள்ளது. இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறக்க திட்டமிட்டு இருக்கிறோம். திறப்பு விழாவை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×