search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில் கோடை கால பயிற்சி முகாம்:  கலெக்டர் தகவல்
    X

    விழுப்புரம் மாவட்டத்தில் கோடை கால பயிற்சி முகாம்: கலெக்டர் தகவல்

    • காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 வரையும் பயிற்சியளிக்கப்படும்.
    • இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்ட ரங்கத்தில் 8-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை கோடை கால பயிற்சி முகாம் நடை பெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். தடகளம், கைப்பந்து, கபடி, கால்பந்து, வாலிபால், மல்லர்கம்பம், கூடைப்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டு களில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி முகாமில் 10 வயதிற்கு மேற்ப்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம். காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 வரையும் பயிற்சியளிக்கப்படும்.

    இந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வர்கள் தங்கள் பெயர்களை 6381799370 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். அல்லது 8-ந் தேதி அன்று நேரடியாக மாவட்ட விளை யாட்டரங்கம், அரசு கலை கல்லூரி அருகில் கீழ்பெரும் பாக்கம், விளையாட்டு மைதானத்தில் காலை 7.30 மணிக்கு நடை பெறும் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பயன்பெற லாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் அனை வருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்படும். எனவே இந்த கோடை கால விடுமுறையை பெருமளவில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய விளையாட்டு திறனை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×