என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை நூலகத்தில் கோடை கால ஓவியப்பயிற்சி நிறைவு
    X

    செங்கோட்டை நகராட்சி கமிஷனர் பார்கவி பரிசு வழங்கியபோது எடுத்தபடம்.

    செங்கோட்டை நூலகத்தில் கோடை கால ஓவியப்பயிற்சி நிறைவு

    • செங்கோட்டை நூலகத்தில் குரூப் 4 குரூப் 2 பயிற்சி தேர்வுகள் நடைபெறுவதை போன்று ஓவிய பயிற்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
    • ஓவிய பயிற்சியில் சுமார் 100 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நூலகத்தில் ஓவியப் பயிற்சி நிறைவு விழா நடை பெற்றது.செங்கோட்டை நூலகத்தில் குரூப் 4 குரூப் 2 பயிற்சி தேர்வுகள் நடைபெறுவதை போன்று ஓவிய பயிற்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில் இந்த ஆண்டும் கோடை விடுமுறையில் சுமார் 2 வாரங்கள் ஓவியப் பயிற்சி ஓவிய ஆசிரியர் ெரயில்வே முருகையா வழிகாட்டுதலில் நடைபெற்றது. ஓவிய பயிற்சியில் பங்கேற்ற சுமார் 100 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஓவியப் பயிற்சியின் நிறைவு விழாவில் நன்னூலகர் ராமசாமி வரவேற்று பேசினார். நூலக வாசகர் வட்டத்தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நூலக வாசகர் வட்ட இணைச்செயலாளர் செண்பக குற்றாலம், துணைத்தலைவர் ஆதிமூலம், பொருளாளர் தண்டமிழ்தாசன் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர மன்றத் துணைத் தலைவர் எம்.எஸ். நவநீதகிருஷ்ணன், கட்டிட ஒப்பந்ததாரர் சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செங்கோட்டை நகராட்சி கமிஷனர் பார்கவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினார். நூலக வாசகர் வட்டப் பொருளாளர் நன்றி கூறினார்.

    Next Story
    ×