என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேய்க்குளம் கடைகளில் சுகாதாரத்துறையினர் 'திடீர்' சோதனை- 7 கடைகளுக்கு அபராதம்
- சோதனையில் சுகாதார குறைவாக காணப்பட்ட 7 கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.
- மக்களுக்கு எந்த வித தீங்கு வராதவாறு உள்ள பொருள்கள் விற்க வேண்டும்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பஜாரில் உள்ள வணிக கடை, ஓட்டல், உள்ளிட்ட கடைகளில் சுகாதார குறைபாடு உள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஆழ்வார்திருநகரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோமசுந்தரம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பேய்க்குளத்தில் உள்ள கடைகளில் 'திடீர்' சோதனை நடத்தினர்.
அதில் கடை உரிமம், குடிநீர் தன்மை உள்ளிட்ட சுகாதாரம் குறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் சுகாதார குறைவாக காணப்பட்ட 7 கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கடைகளை சுகாதார த்துடனும், காலவாதியான பொருள்களை தவிர்த்தும், மக்களுக்கு எந்த வித தீங்கு வராதவாறு உள்ள பொருள்கள் விற்க வேண்டும், சுகாதார குறைபாடு தொடர்பாக கடை வியாபாரிகள் செயல்படுவது கண்டறி யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Next Story






