search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே கோடங்குடி ஏரியில் திடீர் தீ;   மள மளவென எரிந்த மரங்கள் வருவாய்துறையினர் விசாரணை
    X

    ஏரியில் பிடித்த திடிர் தீ குறித்து அங்கிருந்தவர்களிடம் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினர். ஏரிப்பகுதி புகைமூட்டமாக உள்ளதை படத்தில் காணலாம்.

    திட்டக்குடி அருகே கோடங்குடி ஏரியில் திடீர் தீ; மள மளவென எரிந்த மரங்கள் வருவாய்துறையினர் விசாரணை

    • கொடிகள் முளைந்து காய்ந்திருந்தது. மேலும், ஏரியில் மரங்களும் உள்ளன.
    • மயில், முயல், கால்நடைகள் அங்கிருந்து வெளியேறின.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கோடங்குடி கிராமத்தில் பெரிய ஏரி, நடு ஏரி, பழைய ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 144 ஏக்கர் ஆகும். இந்த ஏரியின் நடுவில் கோரைப் புற்கள் மற்றும் பல்வேறு வகையான கொடிகள் முளைந்து காய்ந்திருந்தது. மேலும், ஏரியில் மரங்களும் உள்ளன. இந்நிலையில் நடு ஏரியில் திடீரென நேற்று தீப்பற்றியது. இந்த தீ மளமளவென ஏரி முழுக்க பரவியது. இதில் சீமை கருவேல மரங்களும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. ஏரியின் அருகில் நிலங்களில் பணி செய்தவர்கள் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேறினர்.

    தீயினால் ஏற்பட்ட வெப்பம் தாங்க முடியால் ஏரியில் இருந்த மயில், முயல், கால்நடைகள் அங்கிருந்து வெளியேறின. இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் ஏரிக்கு வந்து ஆய்வு செய்தனர். ஏரியில் திடீரென எவ்வாறு தீப்பிடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×