search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்னா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி மாணவ மாணவிகள் பங்கேற்பு
    X

    போட்டியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    அண்னா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி மாணவ மாணவிகள் பங்கேற்பு

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில்,மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
    • போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில்,மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

    போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட விளை யாட்டு அலுவலர் கோகிலா முன்னிலை வகித்தார்.

    இந்த சைக்கிள் போட்டி கள், 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. ஆகிய பிரிவுகளில் நடந்தது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசு - ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு - ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு பரிசு - ரூ.250/- காசோலையையும் சான்றிதழ்கள் நாளை வழங்கப்படுகின்றன.

    Next Story
    ×