என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிதிராவிடர் நலத்துறையில்   உதவித்தொகை பெற மாணவர்கள் தபால் துறையில் கணக்கு தொடங்கலாம்:கலெக்டர் அறிவிப்பு
    X

    ஆதிதிராவிடர் நலத்துறையில் உதவித்தொகை பெற மாணவர்கள் தபால் துறையில் கணக்கு தொடங்கலாம்:கலெக்டர் அறிவிப்பு

    • 2022-2023-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கல்வி உதவி தொகை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
    • ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் வங்கி கணக்கு தொடங்கி கொள்ளலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    2022-2023-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கல்வி உதவி தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், மாணவர்களின் ஆதார் மற்றும் தொலைபேசி எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கி கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×