என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி
- பெற்றோர்கள் 5 வயது நிரம்பிய தமது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து பயனடையுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கப்பட்ட பேரணி பஸ் நிலையம் வரை சென்றடைந்தது.
திருவையாறு:
திருவையாறில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கப்பட்ட பேரணி பஸ் நிலையம் வரை சென்றடைந்தது.
இப்பேரணியில் திருவையாறு தாசில்தார் பழனியப்பன், தனி தாசில்தார் பூங்கொடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார், திருவையாறு ஊராட்சி ஒன்றித் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 200 மாணவர்கள் மற்றும் 66 ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டு, பெற்றோர்கள் 5 வயது நிரம்பிய தமது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து பயனடையுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணிக்கான ஏற்பாடுகளை திருவையாறு ஊராட்சி ஒன்றியம் மற்றும் தொடக்கக் கல்வித் துறையினர் செய்திருந்தனர்.
Next Story