என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லணை பாலத்தில் சுற்றி திரியும் தெரு நாய்கள்.
கல்லணையில் சுற்றித்திரியும் தெருநாய்கள்
- பாலங்களில் நடந்து வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நடந்து வரும் நிலை உள்ளது.
- குழந்தைகளுடன் கல்லணையை சுற்றி பார்க்க வருபவர்கள் அச்சமடைகின்றனர்.
பூதலூர்:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான கல்லணையை சுற்றி பார்க்க தினமும் மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கல்லணை பாலங்கள், குழந்தைகள் பூங்கா, கரிகாலன் பூங்கா,கரிகாலன் மணிமண்டபம் ,ஆகிய இடங்களை பார்வையிட்டு மகிழ்வர்.கல்லணை பாலங்களில் நாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
பாலங்களில் நடந்து வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நடந்து வரும் நிலை உள்ளது.
நாய்கள் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு அங்குமிங்கும் ஓடுவதால் குழந்தைகளுடன் கல்லணையை சுற்றி பார்க்க வருபவர்கள் அச்சமடையும் நிலை உள்ளது.
உடனடியாக கல்லணை பாலங்களில் சுற்றி திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story