search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்கள்
    X

    கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்கள்

    • பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகராட்சி 87 -வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் ராஜூ நகரில் தெருநாய்கள் 24 மணி நேரமும் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    நள்ளிரவு நேரங்களில் ஒரு நாய் குரைக்கும்போது, அதன் சத்தத்தை கேட்டு மற்ற நாய்களும் சேர்ந்து குரைத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் தூக்கம் கெடும் நிலை உள்ளது. மேலும் சிறிய குழந்தைகள் தின்பண்டங்கள் வாங்குவதற்காக வெளியே கடைக்கு வரும்போது நாய் துரத்தும் அவல நிலையும் உள்ளது.

    சில சமயங்களில் நாய் துரத்தும் போது ஓடிச் செல்லும் குழந்தைகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய் துரத்துவதால், அவர்கள் பதறி அடித்துக் கொண்டு வேகமாக சென்று தடுமாறி கீழே விழுகின்றனர்.

    கார் செல்லும்போது அந்த காரை தெரு நாய்கள் கூட்டமாக குறைத்துக் கொண்டே துரத்துகிறது. இன்னும் ஒரு சில சமயங்களில் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டு கடித்துக் குதறி கொள்ளும் காட்சியும் காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாயும் ரத்தம் சொட்ட சொட்ட தெருகளில் ஓடுகிறது. இதனால் நோய் பரவும் அபாய ஏற்படுகிறது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது,

    இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது நாய்கள் கூட்டத்தைக் கண்டு பயந்து வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. ஒரு நாய் துரத்தும் போது அத்தனை நாய்களும் சேர்ந்து துரத்துகிறது.

    இதனால் அடிக்கடி தலை தெரிக்க ஓடும் நிகழ்வு ஏற்படுகிறது. வீட்டின் கதவை தெரியாமல் மறந்து திறந்து வைத்து விட்டால் நாய்கள் வீட்டுக்குள் வந்து விடுகிறது. பின்னர் அந்த நாய்களை மிகவும் சிரமப்பட்டு தான் துரத்த முடிகிறது.

    மேலும் தற்போது தெருக்களில் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்பதால், நாய்களின் கழிவுகள் நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. வீட்டில் வளர்க்கும் நாய்களை நடைபயிற்சிக்காக வெளியே அழைத்துக்கொண்டு செல்லும்போது, தெரு நாய்களும் சேர்ந்து வளர்ப்பு நாயின் மீது பாய்கிறது.

    அதனை சமாளித்துக் வளர்ப்பு நாயை அழைத்து செல்வதற்குள் போதும் என்றாகி விடுகிறது. கோவை மாநகராட்சி இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு போய் விட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பாதிக்கப்படுவது குடியிருக்கும் மக்கள்தான் என்றனர்.

    Next Story
    ×