search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வ.உ.சி. மைதானத்தில் 25-ந் தேதி தொடங்குகிறது: புத்தக திருவிழாவையொட்டி வாசகங்கள் எழுதும் போட்டி

    • வருகிற 25-ந் தேதி‘6-வது பொருநை நெல்லை புத்தக திருவிழா’ தொடங்குகிறது.
    • அரங்குகள் அமைக்கும் பணியினை கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) பாளை வ.உ.சி. மைதானத்தில் '6-வது பொருநை நெல்லை புத்தக திருவிழா' தொடங்குகிறது.

    100-க்கும் மேற்பட்ட அரங்குகள்

    அடுத்த மாதம் 7-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் இந்த புத்தக திருவிழா அனைவருக்குமான பண்முக தன்மையை போற்றும் வகையிலும், அனைவருக்குமான விழாவாக நடத்தப்படுகிறது.

    விழாவில் முதல் 3 நாட்கள் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அரங்குகள், பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் தொடர் வாசிப்பு, மாணவர் கையெழுத்து இதழ், கல்லூரி மாணவர்களுக்கான இதழியல் பயிற்சி பட்டறை மற்றும் புத்தக வெளியீடுகள் நடைபெறுகின்றன.

    இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    புகைப்பட கண்காட்சி

    சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் இல்லாத புத்தக திருவிழா வாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவை காண வரும் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான பாரம்பரிய உணவுகள் வழங்கிட உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.

    விழாவின் ஒரு பகுதியாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் முதல்-அமைச்சரின் சிறப்பான திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. மேலும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

    கலெக்டர் ஆய்வு

    புத்தக திருவிழாவை யொட்டி வ.உ.சி. மைதானத்தில் அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியினை கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் குமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    வாசகங்கள் எழுதும் போட்டி

    புத்தகத் திருவிழா விற்கான கருத்தை உள்ளடக்கிய வாசகங்கள் எழுதும் போட்டி நடை பெறுகிறது. இப்போ ட்டிக்கு வாசகங்கள் மேற்படி கருத்தை உள்ளடக்கி யதாகவும், சுமார் 4 அல்லது 5 வார்த்தை களுக்கு மிகாமலும், பிறமொழி கலப்பில்லா மலும், படைப்பாளியின் சொந்த கருத்தாகவும் இருத்தல் வேண்டும். இப்போ ட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணகள் உட்பட பொதுமக்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.

    போட்டிக்கான வா சகங்களை படைப்பாளியின் முழு முகவரி, தொடர்பு எண் ஆகிய விபரங்களுடன் வருகிற 23ந் தேதி மாலை 5 மணிக்குள், porunainellaifest@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 வாசகங்களுக்கு புத்தகத் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்படும். முதலிடம் பிடிக்கும் வாசகமானது இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் கருப்பொருள் வாசசுமாக பயன்படுத்தப்படும் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

    Next Story
    ×