search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்
    X

    தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகள்.

    கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்

    • 20 ஆயிரம் டன் மூட்டைகள் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    • குறைந்தபட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 93 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த பயிர்கள் ஆகஸ்டு மாதத்தில் துவங்கி அறுவடை செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சேமிப்பு கட்டிடங்கள் கூடிய நெல் கொள்முதல் நிலையம், திறந்தவெளி கொள்முதல் நிலையம் என 120 இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கொள்முதல் நிலையங்களிலும் இதுவரை 35ஆயிரம் டன்களுக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் 20 ஆயிரம் டன் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    15 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடப்பதால் எடை குறைவு ஏற்பட்டால் ஊழியர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து கொள்முதல் நிலைய ஊழியர்கள், விவசாயிகள் தெரிவிக்கையில் குறுவை நெல் எப்போதும் அறுவடை செய்து பல நாட்கள் அடுக்கிவைத்திருந்தால் இயல்பாகவே எடை குறையும்.

    கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப்படாமல் தேங்கி கிடக்கிறது, கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரத்தில் மழையும் பெய்துவருகிறது.

    கடந்த சில வாரங்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் குறைந்த பட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் குறையாமல் தேங்கி கிடக்கிறது,

    இதனால் ஏற்படும் எடை இழப்பிற்கு ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது.

    மேலும் மழைபெய்வதாலும், கால்நடைகள், எலி ஆகியவற்றால் ஏற்படும் சேதத்திற்கும் ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது, கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவத்றகு முன்பு உடனுக்குடன் கிடங்கிற்கு கொண்டு செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×