என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விவசாயிக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
  X

  விவசாயிக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
  • காயம் அடைந்த இளையராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை அருகே உள்ள வெண்டையம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (வயது34) விவசாயி.

  அதே பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா (26).

  இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

  சம்பவத்தன்று புதுக்குடியில் நடைபெற்ற திருமணத்திற்கு இளையராஜா, ராஜா ஆகிய இருவரும் வந்துள்ளனர்.

  அப்போது திருமண மண்டபத்தின் அருகே இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

  இதில் ராஜா ஆத்திரம் அடைந்து இளையராஜாவை கீழே தள்ளி விட்டு கத்தியால் குத்தி உள்ளார்.

  இதில் காயம் அடைந்த இளையராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

  இதுகுறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

  Next Story
  ×