search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை-ஸ்ரீவைகுண்டம் புதிய டி.எஸ்.பி. பேட்டி
    X

    போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை-ஸ்ரீவைகுண்டம் புதிய டி.எஸ்.பி. பேட்டி

    • ஸ்ரீவைகுண்டம் புதிய டி.எஸ்.பி. மாயவன் பதவியேற்றார்.
    • சட்டவிரோத குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. வெங்கடேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய டி.எஸ்.பி.யாக மாயவன் பதவியேற்றார்.

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் திருப்பூரில் பயிற்சி டிஎஸ்பி-ஆக பணியாற்றி உள்ளார். தற்போது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.யாக பதவியேற்றுள்ளார்.

    அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்தால் குற்றங்கள் நடைபெறாது. எனவே போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்து தற்போது டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ளேன்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்படும்.

    தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே உயர் கல்வி பயில முடியும் அரசு வேலைவாய்ப்பினை பெற முடியும் என்ற தவறான எண்ணங்களை மாற்றி அரசு பள்ளி பயிலும் மாணவர்களும் உயர் பதவிக்கு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல், மற்றும் கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மணல் கடத்துபவர் மீதும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை கொட்டுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×