search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி
    X

    கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்கள்.

    திருவாரூரில், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி

    • அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,
    • எதிர்காலத்தில் பேச்சு திறமையால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் ஆணையம் சார்பில் திருவாருர் மாவட்ட கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி ராபியம்மாள் அகமது மொய்தீன் கல்லூரியில் நடைபெற்றது.

    விழாவை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போட்டி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ராபியம்மாள் கல்லூரி செயலாளர் பெரோஷா முன்னிலை வகித்தார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் அனைவரையும் வரவேற்றார்.

    தொடர்ந்து, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றும் போது:-

    அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, மாணவர்கள் அதை பயன்படுத்தி மேல்படிப்புகள் படிக்க வேண்டும் என்றார்.

    தாட்கோ தலைவர் மதிவா ணன் வாழ்த்துரையாற்றும் போது:-

    பேச்சுதிறன் என்பது சிறுவயது முதலே தொடங்க வேண்டும், எதிர்காலத்தில் பேச்சு திறமையால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்றார்.

    தொடர்ந்து, போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    பேச்சுப்போட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஹாஜாகனி போட்டியின் நோக்கம் குறித்து பேசினார்.

    ராபியம்மாள் கல்லூரி முதல்வர் விஜயலெட்சுமி, பாலம் தொண்டு நிறுவனச்செயலாளர் செந்தில்குமார், போட்டி நடுவர்களாக கோமல் தமிழமுதன், அறிவழகன், அமானுல்லா, அஸ்வின் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பேசினர்.

    தமிழ் வழி பேச்சுப்போட்டியில் திரு.வி.க அரசு கலை கல்லூரி மாணவியும், ஆங்கில வழி பேச்சு போட்டியில் ராபியம்மாள் கல்லூரி மாணவியும் முதல் இடத்தை பிடித்து ரூ.20 ஆயிரம் பரிசுத்தொகை வென்றனர் .

    முடிவில் இணை ஒருங்கிணைப்பாளர் ஷாகுல் ஹமீது நன்றி கூறினார்.

    Next Story
    ×