என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வரரை திரளான பக்தர்கள் காத்திருந்து தரிசித்தனர்.
திருக்கொள்ளிக்காடு, பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
- கைகளில், கலப்பை, காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய வரத முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.
- உழவர் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது.
நவக்கிரகங்களில் ஒருவரான சனீஸ்வரர், இங்கு பொங்கு சனீஸ்வராக அருள்பாலிப்பதால் இக்கோவில் பொங்கு சனீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது.
இக்கோவிலில் தனிச்சன்னதியில் பொங்கு சனி பகவான் கைகளில், கலப்பை, காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய வரத முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் உழவர் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






