என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெல்காம்-கொல்லம் இடையே போத்தனூர் வழியாக சிறப்பு ெரயில்கள் இயக்கம்
    X

    பெல்காம்-கொல்லம் இடையே போத்தனூர் வழியாக சிறப்பு ெரயில்கள் இயக்கம்

    • சபரிமலை சீசனை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கர்நாடக மாநிலம் பெல்காம்-கொல்லம் இடையிலான சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
    • 21-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு பெல்காம் சென்றடையும்.

    கோவை,

    சபரிமலை சீசனை முன்னிட்டு பெல்காம்-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ெரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை சீசனை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கர்நாடக மாநிலம் பெல்காம்-கொல்லம் இடையிலான சிறப்பு ெரயில் (எண்:07357), நாளை காலை 11.30 மணிக்கு பெல்காமில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    இதேபோன்று, கொல்லம்-பெல்காம் இடையிலான சிறப்பு ெரயில் (எண்:07358), வரும் 21-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு பெல்காம் சென்றடையும்.

    பெல்காம்-கொல்லம் இடையிலான சிறப்பு ெரயில் (எண்:07361), வரும் டிசம்பர் 4-ந் தேதி முதல் 2023 ஜனவரி 15-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 11.30 மணிக்கு பெல்காமில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    கொல்லம்-பெல்காம் இடையிலான சிறப்பு ெரயில் (எண்:07362), வரும் டிசம்பர் 5-ந் தேதி முதல் 2023 ஜனவரி 16-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில், மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு பெல்காம் சென்றடையும்.

    கர்நாடக மாநிலம் ஹுப்ளி- கொல்லம் இடையிலான சிறப்பு ெரயில் (எண்:07359) வரும் 27-ந் தேதி மதியம் 2.40 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    கொல்லம்-ஹுப்ளி இடையிலான சிறப்பு ெரயில் (எண்:07360) வரும் 28-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 8 மணிக்கு ஹுப்ளி சென்றடையும்.

    இந்த ெரயில்கள் சாஸ்தான்கோட்டா, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் நகரம், ஆலுவா, திருச்சூர், பால்க்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ெரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×